லேபிள்கள்

8.9.15

பிளஸ் 2 துணை தேர்வுக்கு தத்கலில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, 'தத்கல்' மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு தேர்வுகள் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

துணைத் தேர்வுகள், வரும், 28ம் தேதி துவங்க உள்ளன. பிளஸ் 2 தேர்வு, அக்., 10 வரையிலும்; 10ம் வகுப்புக்கு, அக்., 6ம் தேதி வரையிலும் நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிந்து விட்டது.

சிறப்பு அனுமதி, தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வுக்கு, வரும், 9, 10ம் தேதிகளில் 'ஆன்-லைனில்' விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்புக்கு, வரும், 10, 11ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். தனியார், 'பிரவ்சிங்' மையங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியாது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள, சேவை மையங்கள் மூலமே விண்ணப்பிக்க முடியும். சேவை மையங்கள் மற்றும் தேர்வு குறித்த விவரங்களை, www.tndge.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக