தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களில் 400 பேருக்கு மட்டும் தலைமைப் பண்பு பயிற்சி சென்னையில் அளிக்கப்பட உள்ளது.
இதை அனைவருக்கும் கல்வி இயக்கமும், மாநில கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனமும் இணைந்து நடத்த உள்ளன.
இந்தப் பயிற்சியை வழங்க மாவட்டத்துக்கு 4 பேர் வீதம் மாநில கருத்தாளர்களாக தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களை அவர்களின் தகுதி, திறமை, பணியில் அனுபவம், புதுமையான முயற்சிகளில் ஈடுபாடு ஆகிய தர அளவீடுகளைக் கொண்டு தேர்ந்தெடுத்து, செப்டம்பர் 10-க்குள் அனுப்பிட, மாநில தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, மாவட்டத்துக்கு 4 பேர் வீதம், பயிற்சி வழங்கும் மாநில கருத்தாளர்களாகப் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்ப் பட்டியல் வியாழக்கிழமை மாலை மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக