லேபிள்கள்

10.9.15

11,000 மாணவர்களுக்கு அறிவியல் விருது மத்திய அரசு ரூ.2.40 கோடி ஒதுக்கீடு

நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்தில், 11 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் விருது வழங்க, மத்திய அரசு, 2.40 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடத்தி, 'இன்ஸ்பயர்' விருது வழங்கப்படுகிறது.

மாவட்ட விருதுக்கு, 2,000 ரூபாய்; மாநில விருதுக்கு, 2,500 ரூபாய் மற்றும் சான்றிதம் வழங்கப்படும். மாநில அளவில் தேர்வு பெறுவோர், தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுவர்.இந்த விருதையும், அதற்கான நிதியையும், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்குகிறது.நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்திற்கு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், 2.40 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.


இந்த நிதியில், 11 ஆயிரம் பேருக்கு விருதுகள் வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'இன்ஸ்பயர்' விருதுகள் வழங்குவது தொடர்பாக, பரிந்துரை செய்யப்படும் பள்ளிகளின் பட்டியலை, வரும், 15ம் தேதி வரை, 'ஆன் - லைனில்' அனுப்பலாம் என, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விவரங்களை, inspirea wards-dst.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக