லேபிள்கள்

11.9.15

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ,  மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2015-16ம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் வரும் 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


9-ம் வகுப்பு முதல் பிஎச்டி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம் அக்டோபர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக