லேபிள்கள்

7.9.15

5,300 காலியிடங்களுக்கு விரைவில் தேர்வு டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அறிவிப்பு

அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 5,300 பணியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வுகள் அறிவிக்கப்படும்,'' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில், 213 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான, எழுத்துத்தேர்வு நடந்தது. சென்னையில், 28 மையங்கள் உட்பட, எட்டு மாவட்டங்களில், 91 மையங்களில், 27 ஆயிரத்து, 552 பேர் தேர்வு எழுதினர்.

சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் பார்வையிட்டனர்.

பின், பாலசுப்ரமணியன் கூறியதாவது:

உதவி பொறியாளர் தேர்வுக்கான, 'கீ ஆன்சர்' ஒரு வாரத்தில் வெளியிடப்படும்; இரு மாதங்களில் தேர்வு முடிவு வெளியாகும். வி.ஏ.ஓ., - 800; நேர்முகத்தேர்வு
இல்லாத, 'குரூப் - 2 ஏ' பணியிடங்கள் - 1,700; 'குரூப் - 4' பணியிடங்கள் - 2,800 என, 5,300 காலியிடங்களுக்கு விரைவில் தேர்வு அறிவிக்கப்படும்.

சமீபத்தில், 4.78 லட்சம் பேர் எழுதிய, குரூப் - 2 தேர்வு முடிவு, இம்மாத இறுதியில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக