லேபிள்கள்

10.9.15

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: செப். 21 முதல் 23 வரை அறிவியல் செய்முறைத் தேர்வு

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெற உள்ளது.இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:


அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற்றவர்களும், ஏற்கெனவே இந்தப் பயிற்சியைப் பெற்று செய்முறைத் தேர்வில் பங்கேற்காதவர்களும் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம்.


வரும் மார்ச் 2016-இல் அறிவியல் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் ஜூன் மாதம் நடைபெற்ற செய்முறை பயிற்சிக்கு பெயர்களை பதிவு செய்திருப்பர். அந்தத் தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். செய்முறைத் தேர்வு நடத்தப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக