லேபிள்கள்

10.9.15

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு, 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், மத்தியஅரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி, 6 சதவீதம் உயர்த்தப்பட்டது. 

அதனால், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில், 113 சதவீதம், அகவிலைப்படியாக, ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்டது.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று கூடிய மத்திய அமைச்சரவை, மத்திய அரசு ஊழியர் மற்றும், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படியை, மேலும் 6 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளித்தது.


இதன் மூலம், அடிப்படை சம்பளத்தில், 119 சதவீத அகவிலைப்படி கிடைக்கும். நாடு முழுவதும், 48 லட்சம் அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியர்களும், அகவிலைப்படி உயர்வால் பயன் பெறுவர். ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரை செய்த திட்டத்தின் கீழ், அகவிலைப்படி மாற்றியமைக்கப்படுகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக