சட்டப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
இளநிலை சட்டப் படிப்புக்கான (எல்.எல்.பி.) மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 10-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக