தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் சிறப்புக்கல்விகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (செப்.11)முதல் விநியோகிக்கப்படும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திமாற்றுத்திறன்குழந்தைகளுடன்: பணிபுரியக் கூடிய பயிற்சி பெற்ற வல்லுநர்களின் தேவைஅதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சிறப்புக் கல்வியில் முதுநிலைத்தொழிற் பட்டயம், முதுநிலை தொழில் சான்றிதழ் படிப்புகளை 2015-ஆம் ஆண்டுமுதல் பல்கலைக்கழகம் வழங்க உள்ளது. ஏற்கெனவே, கடந்த 2008-ஆம் ஆண்டுமுதல் பி.எட். சிறப்புக் கல்வியை பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. இப்போதுமாநிலத்திலேயே முதன் முறையாக எம்.எட். சிறப்புக் கல்வியும்பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நவம்பர் 23-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
இந்த எம்.எட். படிப்புக்கான விண்ணப்பம், புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ளசிறப்பு கல்வி படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் பல்கலைக்கழகதலைமை அலுவலகத்திலும், சிறப்புக் கல்வி கற்றல் மையங்களிலும்வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக