டெட் என்று ஒரு நாடகம் நடத்தி படித்தவர்களின் மனநிலையைகெடுக்கும் தமிழக அரசு, மேலும் படித்தவர்களின் மீதுதொடுக்கப்படும் ஒரு கலியுக வன்கொடுமைதான் ஆசிரியர்தகுதித்தேர்வு என்றுதான் சொல்ல தோன்றுகிறது. நான் இவ்வாறு பேச எண்ணற்றகாரணங்கள் உண்டு அவற்றை பட்டியலிடுகிறேன்.
தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் .
சில கேள்விகள்:
1. டி.இ.டி என்பதன் விளக்கம் தான் என்ன? அது தகுதி தேர்வு என்றால்வெறும் தகுதியாக மட்டும் கருதுவது தானே முறை.
.
2. SLET, NET, PGTRB, TNPSC Exam, Bank Exam, Railway Exam, அவ்வளவுஏன் இந்திய அரசியல் அமைப்புகள் மிக முக்கிய தேர்வாககருதப்படும் IAS தேர்விற்கும் கூட படிப்பு மற்றும் வயது சார்ந்தஅடிப்படை தகுதிகளை அடுத்து தேர்வாளர்களுக்கு அந்தந்ததுறையில் நடத்தப்படும் மதிப்பெண் அடிப்படையில்தான் பணிவழங்கப்படுகிறது. டெட் தேர்வில் மட்டும் முரண்பாடு ஏன்?
.
3. டெட் தேர்வில் மட்டும் வெயிட்டேஜ் முறை கொண்டு வந்ததற்கானகாரணம் என்ன? வெயிட்டேஜ் முறையில் எத்தனை முரண்பாடுகள்ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை நிலவி வருகிறது.
.
4. இரண்டு முறை டெட் தேர்வுகள் நடைபெற்ற பின்பு திடீரெனமதிப்பெண் சலுகை வழங்கியதற்காண காரணம் என்ன? சலுகைவழங்குவதாக இருந்தால் 2012 - ல் நடைபெற்ற டெட் தேர்விற்கும்சலுகை வழங்குவதுதானே முறை.
.
5. 2012 தேர்வு அறிவிக்கும்போதே சரியான வரைமுறை கொடுத்துதேர்வுகள் வைத்திருந்தால் பலரின் வாழ்வு பறிக்கப்படாமல்இருந்திருக்கும்,
எகா:- 2012 டெட் தேர்வில் 82 மதிப்பெண் முதல் தகுதி என்றால் அந்தஆண்டு 82,83,84,85,86,87,89 மதிப்பெண் பெற்ற பல தேர்வர்கள் 18 மாதம்ஊதியம் பெற்று வாழ்வில் மதிக்கதக்க நிலை பெற்று இருப்பார்கள்அல்லவா? அவர்கள் மட்டும் பாவம் செய்தவர்களா?
.
6. 2012 தேர்விற்கு ஒரு வெயிட்டேஜ் முறை, 2013 தேர்விற்கு மற்றொருவெயிட்டேஜ் முறை என்பதே முற்றிலும் தவறான ஒன்றாகவேதோன்றுகிறது.
.
7. 10 வருடங்களுக்கு முன் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணிவழங்குவது மிகவும் தவறான ஒன்று. வெயிட்டேஜ் முறை ஆசிரியர்பணிக்கு படித்தவர்களை ஏமாற்றும் செயல். 1980 - களில் இருந்து 2014ஆம் ஆண்டுகள் வரை கல்வி முறைகள், பாடத்திட்டங்கள்,கற்பிக்கும் முறை போன்றவை ஒரே மாதிரியாக உள்ளதா? 1980 -ஆம்வருடங்களில் +2, கல்லூரி படிப்பும், 2000 ஆண்டிற்கு பின்பு உள்ள +2,கல்லூரி படிப்பும் ஒன்றுக்கொன்று நிகராணவையா? ஒரேமாதிரியானவையா? இதனை கேட்டால் தரமான ஆசிரியர்களைஉருவாக்குவோம், என்று ஒரு போலித்தனமான பதில்கூறப்படுகிறது.
.
8. PG TRB -க்கும், +2 -விற்கு 10 மதிப்பெண், பி.எட்-க்கு 10 மதிப்பெண், UGக்கு 10 மதிப்பெண், PG க்கு 10 மதிப்பெண் என்றும் தேர்வில் பெற்றமதிப்பெண்ணிற்கு 60 மதிப்பெண் என்று வெயிட்டேஜ் முறையைகடைபிடித்தால் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் தகுதியானமற்றும் தரமானவர்களாக இருப்பார்கள் அல்லவா? டெட் தேர்விற்குமட்டும் ஏன் இந்த பாகுபாடு?
.
9. முன்பு படித்த படிப்பிற்கு பணி வழங்குவது, 1. திருமணம் முடிந்துபல வருடங்கள் கழித்து ஒரு ஆண் ஏன் எனக்கு வரதட்சணைவழங்கவில்லை என்று கேட்டு கொடுமை செய்வது போல்இருக்கிறது. வரதட்சணை (வெயிட்டேஜ்) வாங்குவது குற்றம். 2.ஒருவன் பிறக்கும் போதே ஆசிரியராக பணி செய்ய வரம் பெற்றுபிறந்திருக்க வேண்டும் என்று படித்தவர்களை பார்த்து ஆசிரியர்தேர்வு வாரியம் கேட்பதுபோல இருக்கிறது இந்த வெயிட்டேஜ்முறை. இது சரிதானா?
.
10. இளங்கலை பட்டம் முடித்து பி.எட் சேர்வதற்கு தேவையானகுறைந்தபட்ச அடிப்படை மதிப்பெண்ணை அனைத்து பிரிவினருக்கும்குறைத்தது இன்றைய முதல்வர்தான் என்பதை யாரும்மறந்துவிடக்கூடாது. இப்பொழுது அவற்றிற்கு வெயிட்டேஜ் முறைபின்பற்றுவது நியாயம் தானா?
.
11. என் டெட் மதிப்பெண் 93, +2 mark 747, UG மதிப்பெண் சதவீதம்49.00% பி.எட் 75% டெட் வெயிட்டேஜ் 62.2%. தற்போது பணி பெறசற்றும் வாய்ப்பற்ற என்னை போன்ற பல பட்டதாரிகளின் நிலைதான்என்ன?
.
12. வெயிட்டேஜ் முறையால் +2, UG, மதிப்பெண் குறைவாக உள்ளஎன் போன்ற பட்டதாரிகள் என்றுமே ஆசிரியர் பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது அல்லவா? மீண்டும் +2, இளங்கலைபட்ட மதிப்பெண்களை அதிகரிக்க வாய்ப்பு இல்லாத போது டெட்தேர்வில் பல மதிப்பெண் அதிகமாக பெற்றால்தான் வெயிட்டேஜ்மதிப்பெண் 1 அல்லது 2 கூடும், இப்படிப்பட்ட சூழலில் எத்தனைமுறைதான் டெட் தேர்வு எழுதுவது?
.
13. டெட் தேர்வில் முதலில் குறிப்பிட்ட தகுதி (90 மதிப்பெண் மற்றும்அதற்குமேல்) மதிப்பெண் பெற்றும் வேலை வாய்பை இழந்த பலரின்நிலை பற்றி எந்த நீதிவான்களும் யோசிக்காமல் போனதன் காரணம்என்ன?
.
14. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 10+2+3+1 என்ற வரிசை அமைப்பில்படித்தால் போதும் என்றுதான் நினைத்தோம், ஆனால் மீண்டும்மீண்டும் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பலமுறை படிக்க வேண்டும்என்ற சட்டம் வந்துள்ளதை இப்போதுதான் பலர் உணர்கிறோம்.இதுதான் கல்வியாளர்களின் சாதனையா?
.
15. இந்த டெட் தேர்வில் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்எத்தனை ஆசிரியர்கள் தாங்கள் ஏற்கனவே செய்துகொண்டிருந்தவேலையை இழந்துள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியமும்,தமிழக அரசும் அறியுமா? தேர்விற்கு முன்பே தெளிவான அறிவிப்பைவெளியிட்டிருந்தால் பல ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்குசென்றிருப்பார்கள் அல்லவா? இவர்களின் நிலைதான் என்ன? 2014-2015 ஆம் கல்விஆண்டு துவங்குவதற்கு முன்பாக பணி நியமனம்பற்றிய அறிவிப்பு விடாமல் இருந்தது பலரின் வாழ்வைஅழித்துள்ளது.
.
16. மேலும் பலர் என்னை போன்று மேல்படிப்பை இழந்து இருக்கமாட்டார்கள், வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் PG, M.Phil சேர்க்கை தவிர்க்காமல் இருந்திருப்பார்கள், இதுபோன்றோரின்வாழ்விற்கு அரசால் பதில் கூற முடியுமா?
.
17. இந்த டெட் தேர்வால் பலரின் வாழ்வில் ஒளி வந்ததைவிட வயிறுபற்றி எரிந்ததுதான் அதிகம். இங்கே மனிதாபிமானம்காக்கப்படுகிறதா?
.
18. ஒவ்வொரு முறையும் எத்தனை புத்தங்களை தான் படிப்பது, ஒருஅறிவியல் அல்லது கணிதம் படித்த தேர்வர் எத்தனை புத்தகங்களைபடிப்பது என்று இந்த அரசிற்கும், கல்வியாளர்களுக்கும் தெரியுமா?உளவியல் அடிப்படையில் படித்தால் ஒவ்வொரு மனிதனின் அறிவும்,நுண்ணறிவும் 16 வயதில் நின்றுவிடும் என்பதை கல்வியாளர்கள்மறந்து விட்டார்களா?
.
19. மாணவர்கள் மனநிலையை ஆசிரியர் அறிய உளவியல்பாடத்திட்டம் உள்ளதை போல ஆசிரியர்களின் மனநிலையைஅறிந்துகொள்ள அரசாங்கம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம்போன்றவற்றிற்கு ஏதாவது புதிய பாடத்திட்டம், புத்தகம் ஏற்படுத்தவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. இதற்கு கல்வியாளர்களின்பதில் என்ன?
.
20. இதன் மூலம் என்னை போல எத்தனைபேர் மன உலைச்சல்பெற்று வாழ்வை இழந்து வருந்துகிறார்கள் என்று தெரிந்தால்யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்?
.
21. என்னைபோல பலருக்கு மனித உரிமை மீறலுக்கு அர்த்தம்இப்போதுதான் தெரிந்திருக்கும்.
.
22. மனித உரிமை மீறல் மற்றும் மன உலைச்சல் ஏற்பட்டதன்காரணமாக இவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்ததோன்றுகிறது. இதற்கு சட்டத்தில் இடம் உண்டா?
********************************************************************************************
தமிழக அரசு, கல்வித்துறை, கல்வியாளர்கள், சமுக ஆர்வலர்கள் -இவர்களை கேட்கிறேன்.
.
1. ஒரு தேர்வின் மூலம் பணிவழங்குவதாக இருந்தால் அரசாங்கம்அதற்காண அறிவிப்பின்போதே காலிப்பணியிடங்கள், அதற்கானதகுதி, எதன் அடிப்படையில் தேர்வர்கள் பணிநியமிக்கப்படுவார்கள்போன்ற அனைத்து விவரங்களையும் அறிவித்த பின்னரே தேர்வைநடத்த வேண்டும் அல்லவா? அதை கடைப்பிடிப்பதுதான் சரியானமுறையல்லவா? நடந்து முடிந்த தேர்வின் முடிவு அறிவிக்கப்பட்டுசான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த பின்னர் சலுகை வழங்குவதும்,தேர்வு செய்யும் முறையை மாற்றுவதும் சட்டப்படி சரிதானா?
.
2. தேர்வின் வினாக்களுக்கு விடையை வெளியிடுவதில்தான்எத்தனை சிக்கல், எத்தனை முறை மாற்றியமைத்தல்நடைபெறுகிறது, இதன் காரணம்தான் என்ன? வினா, விடைவழங்கிட அரசாங்கம் தேர்வுக்குழு அமைத்தும் ஏன் இத்தனைகுழப்பம்? சரியான விடை எது என்று தேர்வு குழுவிற்கேதெரியவில்லை போலும், தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்த பின்னர்தான் தேர்வு குழு - வினாவிற்கான விடையைதெரிந்துகொள்கின்றன.
.
3. டெட் Syllabus பற்றி ஒரு கேள்வி :
டெட் தேர்வில் B.Sc Maths அல்லது B.Sc Physics படித்த தேர்வர் ஏன்தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் உளவியல் படிக்கவேண்டும்? ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ், ஆங்கிலம், கணிதம்,அறிவியல், சமூக அறிவியல் என்று தனித்தனி ஆசிரியர்கள் எதற்குநியமிக்கப்படுகிறார்;கள்? ஒரு ஆசிரியர் அனைத்தும் அறிந்திருக்கவேண்டும் என்று நீங்கள் கூறினால் அதற்கும் ஒரு கேள்வி எழுகிறதுஎன் மனதில், அறிவியல் அல்லது கணிதம் படித்த ஆசிரியருக்கு சமூகஅறிவியல் பற்றிய அறிவு இல்லாமல் இருந்தாலும் சரியா?முறையா? ஒரு தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது வரலாறு படித்தஆசிரியர் கணிதம், அறிவியல் சார்ந்த அறிவு இல்லாமல் இருந்தால்சரியா? முறையா? ஒரு ஆசிரியர் எல்லாம் தெரிந்துஇருக்கவேண்டும் என்று சொல்லும் பொழுது அனைத்துபட்டதாரிகளும் டெட் தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம்,அறிவியல், சமூக அறிவியல் என அனைத்து பாடங்களையும்படிப்பதுதானே மிகவும் சரி?
.
4. டெட் தேர்வை இவ்வாறு நடத்தும் அரசாங்கம் மேல் படிப்பு என்றுசொல்லப்படும் B.Sc, M.Sc போன்ற பட்டப்படிப்புகளில் அனைத்துபாடங்களையும் பாடதிட்டமாக அமைக்க வேண்டும் அல்லவா?
.
5. டெட் தேர்விற்கு மட்டும் +2, UG போன்ற கல்விகளுக்கு வெயிட்டேஜ்மதிப்பெண் கணக்கிட்டு பணி வழங்கும் முறையை கடைபிடிக்கும்அரசு PG, TRB,TNPSC போன்ற தேர்வுகளின் மூலம் வழங்கும்அனைத்து பணிகளுக்கும் இந்த முறையை கடைபிடிப்பதுதான்நியாயமான செயல் ஆகும்.
ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணியையும், வாழ்க்கையையும்இழந்து துடிக்கும் இந்நேரத்தில் என்னுடைய இந்த கண்ணீர்கட்டுரையை படிக்கும் அனைத்து டெட் தேர்வர்களுக்கும் நன்றி!
இப்படிக்கு,
திரு. Thirumavalavan Gautham,
வேலையில்லா பட்டதாரி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக