லேபிள்கள்

24.7.14

பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா? ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை தாக்கல் செய்ய முடியுமா? வரி கணக்கை தாக்கல் செய்வது எவ்வாறு?

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இம்மாதம் 31-ம் தேதிகடைசி நாளாகும்கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க வருமானவரித்துறையில் கூடுதல் கவுன்டர்கள் வசதி உள்ளிட்டவை
செய்யப்படுவது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான பணி.

பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா?ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை தாக்கல் செய்ய முடியுமா?வரி கணக்கை தாக்கல் செய்வது எவ்வாறுஅதை எங்கே தாக்கல்செய்ய வேண்டும்அவ்வாறு தாக்கல் செய்யத் தவறினால் எவ்வளவுஅபராதம் செலுத்த வேண்டும் என்பன போன்ற பல கேள்விகள்அனைவருக்கும் எழும்இதற்குத் தீர்வளிப்பதுதான் இந்தக்கட்டுரையின் நோக்கமாகும்.

1.வரி விதிக்கப்படும் அளவுக்கு வருமானம் இல்லாதவர்களும்கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?
பான் கார்டு வைத்திருக்கும் தனிநபர் வருமானக்காரர்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை.இருப்பினும் வரி கணக்கு தாக்கல் செய்வது நல்லதுஒருவேளைகணக்கு தாக்கல் செய்வோர் முதலீடு செய்வதுகட்டிடம் வாங்குவது,தங்கத்தில் முதலீடு செய்வது போன்றவற்றில் கடந்த காலங்களில்ஈடுபட்டிருந்தால்அதுகுறித்து எதிர்காலத்தில் மதிப்பீடு செய்வதற்குவருமான வரி அதிகாரிகளுக்கு வசதியாக இருக்கும்.முதலீட்டாளரும் வருமானம் வந்த வழியை ஆதாரமாகக் காட்டமுடியும்.

2.ஆடிட்டர் மூலமாகத்தான் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?
அப்படியொன்றும் அவசியமில்லைகணக்கு தாக்கல் செய்வதற்குஉதவி புரிபவராகத்தான் ஆடிட்டர்கள் உள்ளனர்வரி தொடர்பானவிவரங்கள் தெளிவாகத் தெரிந்து அதன் நடைமுறைகள்புரிந்திருந்தால் அவரவரே கூட வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.ஆண்டு வருமானம் ரூ. 1 கோடிக்கு மேல் இருந்தால் அவரதுகணக்குகள் ஆடிட்டரால் தணிக்கைச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இத்தகைய கணக்கு விவரம் செப்டம்பர் 30-ம் தேதிக்கு முன்பாகதாக்கல் செய்யப்பட வேண்டும்அவ்விதம் செய்யத் தவறினால்வருமான வரி அலுவலகம் மொத்த வருவாயில் அரை சதவீதத்தைஅபராதமாக விதிக்கும்அல்லது ரூ. 1.50 லட்சம் அபராதம்விதிக்கப்படும்இதில் எது குறைவான தொகையோ அத்தொகைஅபராதமாக விதிக்கப்படும்.

3.சென்னை வருமான வரி அலுவலகத்தில் எத்தனை சிறப்புகவுன்டர்கள் திறக்கப்படுகின்றனபிற இடங்களில் எத்தனைதிறக்கப்படும்?
குறிப்பிட்ட பகுதியில் எத்தனை பேர் கணக்கு தாக்கல் செய்வார்கள்என்ற அடிப்படையில் கவுன்டர்கள் திறக்கப்படும்இது தேவைக்குஏற்றாற்போல வருமான வரித்துறை அதிகாரிகளால்தீர்மானிக்கப்படும்.
4.சிறிய நகரங்களில் உள்ளவர்கள் எவ்விதம் வரிக் கணக்கைத்தாக்கல் செய்வதுமாவட்டத் தலைநகரங்களில்தான் செலுத்தவேண்டுமாஅல்லது வேறிடங்கள் உள்ளனவா?
வரி செலுத்துவோருக்கு தாம் எந்த வார்டில் வருகிறோம் என்பதுதெரியும்அதை incometaxindia.gov.in இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்ஆடிட்டரால் தணிக்கை செய்யப்படாத வருமான வரிக்கணக்குகளை அதற்குரிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தாக்கல்செய்யலாம்மின்னணு (ஆன்லைன்மூலமாக தாக்கல்செய்வதற்கான வழியும் உள்ளது.
மின்னணு முறையில் நிர்வகிக்கப்படும் வரிக் கணக்குகளைக்கொண்டவர்கள் மின்னணு முறையில்தான் கணக்கைத் தாக்கல்செய்ய வேண்டும்மின்னணு முறையில் வரி கணக்கு தாக்கல்செய்வதே சிறந்ததுசெலுத்திய வரி போக உங்களுக்கு திரும்ப வரவேண்டிய தொகை எவ்வித இடையூறும் இன்றி உங்கள் வங்கிக்கணக்குக்கு வந்து சேரும்.

5. இப்போது வரியைச் செலுத்திவிட்டு பிறகு வரிக் கணக்கைத்தாக்கல் செய்யலாமா?
2013-14ம் ஆண்டுக்கான கணக்கை ஜூலை 31-ம் தேதிக்குப் பிறகுதாக்கல் செய்தால் அதற்கு எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும்.பொதுவாக மாதச் சம்பளம் பெறுவோர்வருமான வரிக் கணக்கைஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வில்லையென்றால்அடுத்தநாளே வருமான வரித்துறை அதிகா ரிகள் தங்கள் வீட்டுக்கதவை தட்டுவர் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
காலதாமதமாக ஓராண்டு வரை கணக்கை தாக்கல் செய்யலாம்.ஆனால் அதற்கு 234  பிரிவின் படி அபராதம் செலுத்த வேண்டும்.குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் தொகையைஉரிய நிதி ஆண்டில்செலுத்தத் தவறியதற்காக கட்ட நேரிடும்வருமான வரிக் கணக்குசெலுத்தத் தவறியதற்கு ஏற்கத்தக்க விளக்கத்தை அளித்தால் அந்தஅபராதமும் செலுத்தத் தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக