லேபிள்கள்

25.7.14

இளநிலை உதவியாளர்; இன்று கலந்தாய்வு

அரசு பள்ளிக்கல்விதுறையில், இளநிலை உதவியாளர் பணிநியமனம்
வழங்குவதற்கான ஆன்- லைன் கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. டி.என்.பி.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற 1,395 பேர் கல்வித்துறையில் இளநிலை உதவியாளர் பணியிடங்களில் நியமிக்கப்பட உள்ளனர்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம், 2013-14ல் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, பள்ளிக்கல்வி துறையில், இளநிலை உதவியாளர் பணி நியமனம் வழங்குவதற்கான ஆன்-லைன் கலந்தாய்வு, அந்தந்த மாவட்ட‌, முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெறும். பணி நியமனத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட துறை ஒதுக்கீடு ஆணை, கல்விச்சான்று, சாதிச்சான்று ஆகியவற்றை எடுத்து வருதல் அவசியம். இன்று, மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கும், நாளை பிறமாவட்டங்களிலுள்ள காலிப்பணியிடங்களுக்கும், பணிநியமன ஆணை வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக