மலை கிராம பள்ளிகளுக்கு சரியாக செல்லாத ஆசிரியர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மலைக்கிராம பள்ளிகள் அதிகளவில் உள்ளன. ரோடு வசதிஇல்லாததால், மலைகிராம பள்ளிகளுக்கு பல கி.மீ., தூரத்திற்குநடந்து செல்ல வேண்டியுள்ளது.
சில பள்ளிகளுக்கு குதிரை மூலம் மட்டுமே செல்ல முடிகிறது.இதனால், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளை ஆய்வுசெய்வதில்லை. மொபைல் போன் சிக்னல் -ம் சரியாககிடைக்காததால், ஆசிரியர்களை தொடர்பு கொள்வதிலும் சிரமம்உள்ளது. இதை பயன்படுத்தி சில ஆசிரியர்கள் சரியாக பள்ளிகளுக்குசெல்வதில்லை.
அதேபகுதியை சேர்ந்த படித்த இளைஞர்கள் மூலம் பாடம்நடத்தசொல்லி, அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையைகொடுக்கின்றனர். இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல்,காடுகளில் வேலைக்கு சென்றுவிடுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, மலைகிராம பள்ளிகளுக்கு சென்று ஆய்வுநடத்தவேண்டும். வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதிகளில் குறிப்பிட்டநேரமாவது பள்ளிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சரியாக பள்ளிக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக