லேபிள்கள்

21.7.14

ஆசிரியர் தகுதித் தேர்வு "வெயிட்டேஜ்' மதிப்பெண்: திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு மையங்கள்!

ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்மதிப்பெண்ணில் திருத்தம்தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல்
செயல்பட உள்ளன.


பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வுஇரண்டாம் தாள் மற்றும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேருக்கான "வெயிட்டேஜ்'மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 15-ஆம்தேதி வெளியிட்டது.

இந்த மதிப்பெண் விவரங்களில் திருத்தம் தேவைப்படுவோர்மாவட்ட வாரியாக குறிப்பிடப்பட்டுள்ள மையங்களில் அந்தந்தநாள்களில் உரிய ஆவணங்களுடன் செல்லலாம்.

பெயர் மற்றும் பிறந்த தேதியில் மாற்றம் கோருபவர்கள்எஸ்.எஸ்.எல்.சிமதிப்பெண் சான்றிதழையும்ஜாதி விவரங்களில்மாற்றம் தேவைப்படுவோர் வருவாய் அலுவலரிடமிருந்து பெற்றோர்பெயரில் பெறப்பட்ட நிரந்தர ஜாதிச் சான்றிதழையும்

"வெயிட்டேஜ்'மதிப்பெண் விவரங்களில் மாற்றம் தேவைப்படுவோர் அந்தந்த அசல்மதிப்பெண் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.

திருத்தம் தேவைப்படாதவர்கள் இந்த மையங்களுக்கு வரவேண்டாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்காதவர்களுக்கு இறுதிவாய்ப்பாக இந்த மையங்களிலேயே சான்றிதழ் சரிபார்ப்பில்பங்கேற்கலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தத் திருத்தங்கள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு"வெயிட்டேஜ்மதிப்பெண் அடிப்படையில் சுமார் 11 ஆயிரம் பட்டதாரிஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் ஜூலை 30-ஆம் தேதிவெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக "வெயிட்டேஜ்மதிப்பெண்ணில் திருத்தம்செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களின் விவரம்:

1. விழுப்புரம்கடலூர்காஞ்சிபுரம் - ஜூலை 21, 22 - அரசு மகளிர்மேல்நிலைப் பள்ளிவிழுப்புரம்.


2. சென்னைதிருவள்ளூர்திருவண்ணாமலை - ஜூலை 23, 24 - அரசுமேல்நிலைப் பள்ளிவிழுப்புரம்.

 Click here TRB- Notification-Paper 2


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக