குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப்-1 பதவியில் அடங்கிய துணை கலெக் டர் (3), போலீஸ் டிஎஸ்பி (33), வணிகவரித் துறை இணை ஆணையாளர் (33) மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் (10) ஆகிய 79 பதவிகளுக்கான முதல் நிலை தேர்வை கடந்த 20ம் தேதி நடத்தியது.
இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 606 பேர் அனுமதிக்கப்பட்டனர். தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 32 மாவட்டங்களில் 557 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், வெறும் 45 சதவீதம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அதாவது 73,173 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். சென்னையில் 14,983 பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் குரூப் 1 முதல்நிலை எழுத்து தேர்வுக்கான விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணைய தளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.net பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
ஆன்சர் கீயில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் வருகிற 31ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இது குறித்து டி.என். பி.எஸ்.சி. அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஆன்சர் கீ தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் தேர்வர்கள் தெரிவிக்கலாம். அது குறித்து வல்லுனர் குழு ஆய்வு செய்யும். அதன் பின்னர், புதிய ஆன்சர் கீ வெளியிடப் படும். தேர்வு முடிவுகளை குறைந்த பட்சம் 2 அல்லது 3 மாதத்திற்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக