லேபிள்கள்

23.7.14

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு2 அல்லது 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும் அமைச்சர் கே.சி. வீரமணி

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைவழங்கப்படாதது குறித்துவிளக்கம் சட்டசபையில் இன்று பாலபாரதி(மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுஒரு கவன ஈர்ப்பு கொண்டுவந்தார்.அதில், 2013–ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டதகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைவழங்கப்படாதது
குறித்துவிளக்கம் கேட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர்கே.சி.வீரமணிஒரு அறிக்கை தாக்கல் செய்தார்அது குறித்து அவர்கூறியதாவது:–
ஆசிரியர் தேர்வு வாரியம் 12.07.12 அன்று நடத்திய தகுதி தேர்வில் 7லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் தேர்வு எழுதினார்கள்அதில் 2,448 பேர்மட்டுமே தேர்வு பெற்றனர்இது 0.34 சதவீதமாகும்தேர்ச்சி விகிதம்குறைவாக இருந்ததால் 14.10.2012 அன்று துணை தகுதி தேர்வுநடத்தப்பட்டது.

அதில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் தேர்வு எழுதினார்கள்.அவர்களில் 19,261 பேர் தேர்வு பெற்றனர்அது 2.99 சதவீதம்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனம்வழங்கப்பட்டுள்ளது.2013–ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வுஆகஸ்டு மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் நடந்ததுஇதில் இடைநிலைஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187பேரில் 12 ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றனர்பட்டதாரி ஆசிரியர்பணிக்கு 4 லட்சத்து 311 பேர் தேர்வு எழுதியதில் 16 ஆயிரத்து 922 பேர்தேர்ச்சி பெற்றனர்.
இதற்கிடையில்முதல் – அமைச்சர் ஆளுனர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் பதில் உரையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறநிர்ணயிக்கப்பட்ட 60 சதவீத மதிப்பெண் என்பதை மாற்றுதிறனாளிகளுக்கு 5 சதவீதம் குறைந்து நிர்ணயம் செய்யப்படும் எனஅறிவித்தார்.06.02.2014–ல் 60 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம்குறைக்கப்பட்டும் ஆதி திராவிடர்பழங்குடியினர்,பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்சீர்மரபினர்மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கும் தேர்ச்சிமதிப்பெண் 55 சதவீதம் அல்லது 82 மதிப்பெண் என்று நிர்ணயம்செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
முதல் – அமைச்சரால் அறிவிக்கப்பட்ட இந்த சலுகையில் 43ஆயிரத்து 183 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்ஏற்கனவே,தேர்ச்சி பெற்றிருந்தவர்களுடன் இவர்களையும் சேர்த்து 72 ஆயிரத்து701 பேரின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்த்துமுடிக்கப்பட்டுள்ளது.ஆனால் தகுதி தேர்வில் கேட்கப்பட்டவினாக்களுக்கான ஒரு சில விடைக்குறிப்புகள் சரியானது அல்லஎன்று சென்னை உயர்நீதிமன்றத்திலும்மதுரை உயர்நீதிமன்றகிளையிலும் வழக்குகள்தொடரப்பட்டுள்ளனஅரசு பள்ளிகளில்காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பவேண்டும் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளைவிரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசால் துரித நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதுஇதற்கான தீர்ப்புகள் பெறப்பட்டவுடன்ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிடவும்பணி நியமனம்வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடவடிக்கைமேற்கொள்ளப்படும்.

2013–ம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குஅல்லது 3வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர்கே.சிவீரமணி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக