லேபிள்கள்

22.7.17

அனைத்து பள்ளிகளிலும் ராணுவ பள்ளி பாடத்திட்டம்?

புதுடில்லி:'சைனிக் பள்ளி எனப்படும், ராணுவ பள்ளிகளில் உள்ள பாடத் திட்டத்தை, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு,
பிரதமர் அலுவலகம் ஆலோசனை அளித்துள்ளது. நாடு முழுவதும், 25 சைனிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன. உறைவிடப் பள்ளியான இங்கு, மாணவர்கள் தங்கி படிக்க வேண்டும். வழக்க மான பாடத் திட்டத்துடன், உடல் தகுதியை வளர்த்துக் கொள்வது உள்ளிட்ட, ராணுவத் துக்கு தேவையான பயிற்சி இங்கு வழங்கப் படுகிறது.

'கல்வியுடன், ஒழுக்கத்தையும், உடல்ஆரோக்கியத் தையும் ஊக்குவிக்கும், சைனிக் கல்வி முறையை, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும்' என, பிரதமர் அலுவலகம், சமீபத்தில் ஆலோசனை வழங்கி உள்ளது.

இது தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது:

பிரதமர் அலுவலகம் அளித்துள்ள ஆலோசனை குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

மத்திய அரசு நடத்தும், கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில், இந்த கல்வி திட்டத்தை துவங்குவது குறித்து ஆய்வு செய்யப் படுகிறது. ஜவஹர் நவோதயா பள்ளிகளும், உறைவிட பள்ளி என்பதால், அவற்றில்,சைனிக் பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய முடியும். நாடு முழுவதும் உள்ள, 20 ஆயிரம், சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழுள்ள பள்ளிகளில், நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராயப் படுகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக