'பிளஸ் 2 சான்றிதழ்களில், தமிழ் பெயர்களில் திருத்தம் செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில், இந்த ஆண்டு முதல், ஆங்கிலத்துடன், தமிழிலும் மாணவர் பெயர் இடம் பெற்றுள்ளது. இதில், பல மாணவர்களுக்கு, தமிழில் பிழைகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, சான்றிதழை திருத்தம் செய்ய, தேர்வுத் துறை அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் உத்தரவிட்டார். அதனால், பெயர் திருத்தம் செய்ய, வரும், 24 வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், இதற்கான கடிதத்தை வழங்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை, இணையதளம் மூலம் அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பி, தலைமை ஆசிரியர்கள் திருத்தம் செய்யலாம். திருத்தப்பட்ட புதிய மதிப்பெண் சான்றிதழ்களை, வரும், 31 முதல், பள்ளிகளில் பெறலாம். அப்போது, பழைய அசல் மதிப்பெண் சான்றிதழை, பள்ளிகளில் ஒப்படைக்க வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனரகம்
அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக