லேபிள்கள்

18.7.17

'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி சதவீதம் மாற்றம்

பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வில், தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண் சதவீதம் மாற்றப்பட்டுள்ளது.முதுநிலை பட்டம் முடித்தவர்கள், கல்லுாரி மற்றும் பல்கலைகளில், பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' என்ற தேசிய தகுதி தேர்வு அல்லது மாநில அரசின், 'செட்' என்ற மாநில தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 'செட்' தேர்ச்சி பெற்றால், எந்த மாநிலம் தேர்வு நடத்தியதோ, அந்த மாநிலத்தில் மட்டுமே, பணியில் சேர முடியும். இதில், 

ஆங்கிலம் மட்டுமின்றி, அந்த மாநில மொழியிலும், தேர்வு எழுதலாம். தேசிய தேர்வில், ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே எழுத முடியும். ஆனால், தேர்ச்சி பெறுவோர், நாடு முழுவதும் உள்ள பல்கலைகளில் பணியில் சேரலாம்.'நெட்' தேர்வை, மத்திய அரசின் பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., சார்பில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. இந்த ஆண்டு முதல், 'நெட்' தேர்வு, ஆண்டுக்கு இரு முறை என்பது ரத்து செய்யப்பட்டு, ஒரு முறையாக, நவம்பரில் மட்டும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 
இந்த தேர்வில், மூன்று பாடங்களில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பெறுவதுடன், தேர்வு எழுதியவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற, முதல், 15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். இந்த நடைமுறையை மாற்ற, கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதை தொடர்ந்து, இந்த ஆண்டு முதல், மூன்று பாடங்களிலும் ஒட்டு மொத்தமாக தேர்ச்சி பெறுவோரில், முதல் ஆறு சதவீதம் பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக