'அங்கன்வாடி மையங்களில், 8 மாதங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை முகமது யூனுஸ் ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு:'தமிழகத்தில், அங்கன்வாடி மையங்களில் தண்ணீர், துப்புரவு பணியாளர்களுடன் கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும்' என, 2015ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பல்வேறு மையங்களில் கழிப்பறைகள் சரியில்லாததால், குழந்தைகள் இயற்கை உபாதைகளை கழிக்க, திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர்.சேதமடைந்துள்ள அங்கன்வாடி மையங்களை சீரமைத்து மின்சாரம், மின்விசிறி வசதி செய்ய வேண்டும். தண்ணீர் வசதியுடன் கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு முகமது யூனுஸ் ராஜா மனு செய்திருந்தார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத்திட்ட இயக்குனர் பதில் மனுவில், '6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் நலன் கருதி, அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என, குறிப்பிட்டு
இருந்தார்.
இதையடுத்து, நீதிபதிகள், கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அடங்கிய அமர்வு, பிறப்பித்த உத்தரவில், 'அங்கன்வாடி மையங்களில், 8 மாதங்களுக்குள் கழிப்பறை வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும்; வழக்கை பைசல் செய்கிறோம்' என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக