தமிழகம் முழுவதும் இன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆசிரியர் - அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆசிரியர் - அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்தும் பல்வேறு அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசுத்துறை ஊழியர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கார்களிலும், வாடகை வேன்களிலும் புறப்பட்டு வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
அலுவக நேரம் முடிந்து மாலை 5 மணிக்குப் பிறகே இப்போராட்டம் துவங்கியது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அமர்ந்து தொடர் முழக்கங்களை இட்டவாறு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
அதில், தற்போது தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வரும் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை பாரபட்சமின்றி அனைவருக்கும் அமுல்படுத்தியாக வேண்டும். ஆசிரியர்ர, அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துவதற்கு முன்னதாகவே 20 சதவிகித இடைக்கால நிவாரணத்தை அரசு கட்டாயமாக வழங்கிட வேண்டும். அதிகப்படியான ஆசிரியர் அரசு ஊழியர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு செவிகொடுக்கும் விதமாக, எங்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதனும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.த
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக