லேபிள்கள்

21.7.17

அரசு கல்லூரிகளில் கூடுதல்சேர்க்கை துவக்கம்

தமிழகத்தில் உள்ள, 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளங்கலை படிப்பில் மாணவர் சேர்க்கை நடந்து,
ஜூன், 16ல் கல்லுாரிகள் திறக்கப்பட்டன. இருப்பினும், இன்னும் பல மாணவர்கள், கல்லுாரிகளில் சேர ஆர்வம் காட்டி வருவதால், கூடுதலாக, 25 சதவீத இடங்களில், மாணவர்களை சேர்க்க, பல்கலைகள் அனுமதி பெற்றுள்ளன. அதன்படி, 'வராண்டா அட்மிஷன்' எனப்படும், நேரடி மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது. இதில், கல்லுாரி முதல்வர்களே, மாணவர்கள் சேர்க்கையை முடிவு செய்கின்றனர். பெரும்பாலும், அமைச்சர் முதல் அதிகாரிகளின், சிபாரிசு கடிதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக