லேபிள்கள்

21.7.17

விளையாட்டு பிரிவுக்கு இன்று இன்ஜி., கவுன்சிலிங்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, இன்று(ஜூலை 21) இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அண்ணா பல்கலை வளாகத்தில் நடக்கும், தமிழக இன்ஜி., கவுன்சிலிங்கில், முதற்கட்டமாக, தொழிற்கல்வி மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, இடங்கள் ஒதுக்கப்பட்டன. மொத்தமுள்ள, 1.68 லட்சம் இடங்களில், 5 சதவீதமான, 8,400 இடங்களுக்கு, 227 பேர் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர். அதனால், 8,000 இடங்களுக்கு மேல், யாரும் தேர்வு செய்யாமல் காலியாக உள்ளன. 

விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, நேற்று முன்தினம் முதல், சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கி உள்ளது; இன்று முதல், அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. ஒவ்வொரு கல்லுாரிக்கும், ஒரு இடம் என்ற அளவில், மொத்தம், 500 இடங்கள் விளையாட்டு பிரிவுக்கு ஒதுக்கப்பட உள்ளன. அதற்கு, 2,082 பேர் தகுதி பெற்றுள்ளனர். 

சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், மாணவர்களின் தரவரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டு, இன்று முதல், கவுன்சிலிங் நடக்கும். பொது கவுன்சிலிங், வரும், 23ம் தேதி துவங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக