தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான, குரூப் - 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் காலியாக உள்ள துணை கலெக்டர், 29; டி.எஸ்.பி., 34 உட்பட 85 இடங்களுக்கு, முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., - பிப்., 19ல் நடத்தியது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்வில் 1.37 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களில் அடுத்தகட்ட முதன்மை எழுத்து தேர்வுக்கு 4,602 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். முதன்மை எழுத்து தேர்வு அக்., 13 முதல் 15 வரை நடக்கும். தேர்வு முடிவுகள் 2018 மார்ச்சில் வெளியிடப்படும். தேர்ச்சி பெற்றவர்களின் பதிவெண் விபரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக