மாணவர்கள் பாடத்திட்டங்களை வகைப்படுத்தி படிக்க புதிய தேர்வு கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தோடு 1.8.2012 முதல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பருவகால தேர்வுக்கும் மிக கவனத்தோடும் ஒழுங்காகவும் நடத்தப்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு வழிமுறைகள் தேவைக்கேற்ப புதிய செயல்திட்டங்களாக வகுக்கப்படுகின்றன.
அதன்படி, அனைத்து கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட புதிய பாட அட்டவணைகளை பின்பற்றுமாறு வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:–
* தொழிற்சார்ந்த பயிற்சிக்காக இப்போது 45 முதல் 50 நாட்கள் வரை நடத்தும் அட்டவணையை நடைமுறை தேர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து 28 முதல் 30 நாட்கள் வரை உள்ள தேர்வு அட்டவணைகளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
* புதிய தேர்வுகால பாட அட்டவணை (ஜூலை–நவம்பர் 2017)
பருவத்தின் தொடக்க நாள் – 3.7.2017, 2013 ஒழுங்குமுறை விதிகளின் படி தேர்வுக்கான அட்டவணைகள் வெளியீடு – 20.7.2017, இறுதித்தேர்வுகள் அட்டவணை வெளியீடு – 24.7.2017, கடைசி வேலைநாள் – 21.10.2017, செய்முறை தேர்வுகள் – 23.10.2017 முதல் 28.10.2017 வரை (ஒரு வாரம்), இறுதி தேர்வுகள் – 30.10.2017 முதல் 30.11.2017 வரை(4 வாரங்கள்), விடுமுறை – தேர்வு முடிந்தது முதல் 17.12.2017 வரை(2 முதல் 4 வாரங்கள்), அடுத்த பருவம் தொடங்கும் நாள் – 18.12.2017.
* இனிவரும் காலங்களில் செய்முறை தேர்வுக்கும், எழுத்து தேர்வுக்கும் தேர்வு கால அட்டவணைகள் தொடக்கத்திலேயே வெளியிடப்படுவதால் மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்லூரிகள் தங்களின் மன அழுத்தம் குறைந்து தங்களை ஆயத்தம் செய்துகொள்கிறார்கள். மேலும் மாணவர்கள் வெவ்வேறு பிரிவுகளில் உள்ள பாடத்திட்டங்களை முறையாக வகைப்படுத்தி படிக்கவும் இத்திட்டம் உதவுகிறது.
* 18.12.2017–க்குள் தேர்வுகள் முடிப்பதால் மாணவர்களுக்கு 2 முதல் 4 வாரங்கள் குளிர்கால விடுமுறையும், 4 முதல் 6 வாரங்கள் வரை கோடைகால விடுமுறையும் கிடைக்கும்.
* பல்கலைக்கழகம் அளித்துள்ள பாடம் மற்றும் மதிப்பீடு அட்டவணைகளை கல்லூரிகள் ஒழுங்காக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் கல்லூரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ஒழுங்குமுறை விதிகள் 2013 இறுதி தேர்வுகளுக்கான கால அட்டவணை aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் காணலாம். ஏனைய தேர்வுகளுக்கான கால அட்டவணை 24.7.2017 அன்று அறிவிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக