லேபிள்கள்

19.7.17

லேப்டாப் வழங்காததால் மாணவர்கள் கல்வி பாதிப்பு

சென்னை: சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது துறைமுகம் பி.கே.சேகர்பாபு (தி.மு.க.) பேசியதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து கம்ப்யூட்டர் வகுப்பை தேர்வு செய்த ஏழை, எளிய மாணவர்களுக்கு கணினி இல்லாததால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் உடனடியாக வழங்க வேண்டும். இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் "உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு உள்ளது. தடை விலக்கி கொள்ளப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக