'ஆதார்' அட்டையை எளிதாக கையாளும் வகையில், இந்திய தனி நபர் அடையாள ஆணையம், 'எம்- ஆதார்' என்ற புதிய மொபைல் போன் செயலியை வெளியிட்டுள்ளது.தனி நபரின் கைரேகை, கருவிழி, புகைப்படம், முகவரி, மொபைல் எண், இ -- மெயில் முகவரி விபரங்களை பதிவு செய்து, ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.
அரசு மானியங்கள் பெறுவதற்கு, வங்கிக் கணக்கு துவங்குவது, வருமான வரி தாக்கல் உட்பட, அனைத்து பயன்பாடுகளுக்கும்,
ஆதார் எண் கட்டாயம் என்ற நிலை உள்ளது.ஆதார் கார்டை அடிப்படையாக வைத்து, தனி நபர் பலர், மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கி வெளியிடுகின்றனர்.
இதுபோன்ற அப்ளிகேஷன்களில், பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஆதார் பெயரில், ஏராளமான போலி அப்ளிகேஷன்கள் உலா வருகின்றன. இதற்கு தீர்வாக, இந்திய தனி நபர் அடையாள ஆணையம், 'எம்- ஆதார்' எனும் பெயரில், அதிகார பூர்வ மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. துவக்கத்தில், 'ஆண்ட்ராய்டு மொபைல் போன்' பயனாளர்களுக்கு மட்டுமே, இந்த அப்ளிகேஷன் வழங்கப் பட்டுள்ளது.
'கூகுள் பிளே' ஸ்டோரில், இதை பதிவிறக்கம் செய்து, நிறுவிய உடன், 'பாஸ்வேர்டு' உருவாக்கி, உள்ளே நுழைய வேண்டும். கொடுக்கப்பட்டிருக்கும் தனிப் பிரிவில், ஆதார் எண் பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் உள்ளீடு செய்த உடன், பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு, பாஸ்வேர்டு அனுப்பி வைக்கப்பட்டு, சரிபார்க்கப்படும். அதன்பின், ஆதார் அட்டையின் டிஜிட்டல் வடிவம் திரையில் தெரியும்.
ஆதார் அட்டையின் முன்பக்கம், புகைப்படம், பெயர், ஆதார் எண், பார்கோடு, பிறந்த தேதி; பின்பக்க முழு முகவரி உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். அப்ளிகேஷன் நிறுவப்பட்டிருக்கும் ஸ்மார்ட் போனில், ஆதார் அட்டையில் பதிவு செய்த மொபைல் எண் கட்டாயம் இருக்க வேண்டும். ஒரே அப்ளிகேஷனில், குடும்ப அங்கத்தினர் அனைவரின் ஆதார் அட்டையையும் சேமித்து வைக்க முடியும்.
சிறப்பு அம்சமாக, 'பயோமெட்ரிக் லாக்' மற்றும், 'அன்-லாக்' அம்சமும் உள்ளது. பயோமெட்ரிக் விபரம் பூட்டப்பட்டால்,குறிப்பிட்ட நபரின் ஆதார் விபரங்களை எந்த சூழலிலும்,வேறு
எவரும் அறிந்து கொள்ள முடியாது. ஒரு முறை இயக்கத்துக்கு கொண்டு வந்த பின், இணையதள இணைப்பு இல்லாமலேயே, பாஸ்வேர்டு வழங்கி, தேவையான நேரத்தில், டிஜிட்டல் ஆதார் அட்டையை பார்க்க முடியும்.
பிளே ஸ்டோரில், இந்த அப்ளிகேஷன் வழங்கப்பட்ட உடனேயே, ஆயிரக்கணக்கானோர் நிறுவி, பயன்படுத்த துவங்கி விட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக