லேபிள்கள்

30.3.17

அரசு ஊழியர்கள் போராட முடிவு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி ஏப்ரலில் அரசு ஊழியர்கள் அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மறைந்த முதல்வர் ஜெ., நிபுணர் குழுவை அமைத்தார். ஆனால், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், காலிப் பணியிடங்களை நிரப்புவது, 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர்கள் முடிவு செய்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உயரதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது. ஆனால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.அரசு ஊழியர்கள் சங்க மாநில துணை தலைவர் செல்வம் கூறுகையில், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஆர்வம் காட்டவில்லை.இதனால் ஏப்., 8ல் மாவட்ட தலைநகரங்களில் வேலை நிறுத்த ஆயத்தமாநாடும், 15ல் திருச்சியில் மாநில அளவிலான வேலைநிறுத்த ஆயத்த மாநாடும், 16 முதல் 24 வரை பிரசார இயக்கமும், 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தமும் நடக்கும். இதில் 64 அரசுத் துறையினர் பங்கேற்கின்றனர்.ஆசிரியர்களும் இதில் இணைந்து போராடுவது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. எனவே, முதல்வர் பழனிசாமி சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக