லேபிள்கள்

29.3.17

'நீட்' தேர்வு மையம் மாற்ற மார்ச் 31 வரை அவகாசம்

'நீட்' தேர்வு மையங்களை மாற்றுவதற்கு, வரும், 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு, மே, 7ல் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, 11.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில், 88 ஆயிரத்து, 478 பேர் தேர்வு எழுத உள்ளனர். நாடு முழுவதும், 103 நகரங்களில், 2,200 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என, சி.பி.எஸ்.இ., நேற்று அறிவித்தது. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில், மேலும் ஒரு நகரத்தை, சி.பி.எஸ்.இ., இணைத்துள்ளது. அதனால், தேர்வு மைய நகரத்தை தேர்வு செய்யும் கால அவகாசம், நேற்று முடிய இருந்த நிலையில், மார்ச், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக