லேபிள்கள்

26.3.17

வங்கிகளுக்கு விடுமுறை ஏப்ரல் 1 வரை 'கட்'

பொதுத்துறை வங்கிகள், மார்ச், 25 முதல் ஏப்ரல், 1 வரை விடுமுறையின்றி, செயல்பட வேண்டும்' என, ரிசர்வ் வங்கி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச் செயலர் டி.டி.பிராங்கோ கூறியதாவது:வருமான வரி, வணிக வரி மற்றும் சேவை வரி உள்ளிட்ட, அரசின் பல்வேறு வரிகளை 
வசூலிக்கும், பொதுத்துறை வங்கிக் கிளைகள், மார்ச், 25 முதல் ஏப்ரல், 1 வரை விடுமுறையின்றி செயல்பட வேண்டும் என, மார்ச், 24 நள்ளிரவு தகவல் தெரிவிக்கப்பட்டது.


இதனால், விடுமுறை நாளான, நேற்றும்  அலுவலகம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், வாடிக்கையாளர்கள் வரவில்லை. இன்று ஞாயிற்றுக் கிழமையும் வர வேண்டும்.


மேலும், தெலுங்கு வருடப்பிறப்பு, குடிபத்வா உள்ளிட்ட, பல்வேறு விடுமுறை நாட்களிலும் பணிக்கு வர வேண்டியிருக்கும். இதனால், 
விடுமுறை நாளில் மேற்கொள்ள இருந்த,  ஊழியர்களின் பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 'ஆன்லைன்' பரிவர்த்தனை பெருகியுள்ள நிலையில், இந்த முடிவு தேவையற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக