லேபிள்கள்

27.3.17

200 எம்.பி.பி.எஸ். இடங்கள்: ஜிப்மர் நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

புதுவையில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு 200 எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு ஆண்டுதோறும் தனியாக நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவு தேர்வு வருகிற ஜூன் மாதம் 6-ந் தேதி காலை- மாலை என 2 பிரிவுகளாக நடைபெறுகிறது.


எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பதிவு செய்வது இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. மே மாதம் 3-ந் தேதி மாலை 5 மணிக்குள் இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மொத்தம் உள்ள 200 இடங்களில் புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கு 150 இடங்களும். காரைக்கால் கிளைக்கு 50 இடங்களும் உள்ளன. புதுவையில் உள்ள 150 இடங்களில் 50 இடங்கள் பொது பிரிவுக்கும், 28 இடங்கள் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும், 16 இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும், 11 இடங்கள் பழங்குடியினருக்கும், 40 இடங்கள் புதுவை மாநிலத்துக்கும், 5 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

காரைக்காலில் உள்ள 50 இடங்களில் 15 இடங்கள் பொது பிரிவினருக்கும், 10 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கும், 6 இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கும், 4 இடங்கள் பழங்குடியினருக்கும், 14 இடங்கள் புதுவையை சேர்ந்தவர்களுக்கும், ஒரு இடம் வெளிநாடு வாழ் இந்தியருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுவை, சென்னை, ஐதராபாத், திருவனந்தபுரம், பெங்களூர் உள்பட 75 நகரங்களில் 270 மையங்களில் ஜூன் 4-ந் தேதி நுழைவு தேர்வு நடைபெறும். ஆன்-லைன் மூலம் மட்டுமே தேர்வு எழுத முடியும்.

காலை 10 மணி முதல் 12.30 மணி வரை ஒரு பிரிவாகவும், பிற்பகல் 3 மணி முதல் 5.30 மணி வரை ஒரு பிரிவாகவும் 2½ மணி நேரம் தேர்வு நடத்தப்படும். இதில், 200 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மார்க் அளிக்கப்படும்.

இதன்படி 800 மார்க்குக்கு தேர்வு நடக்கும். இதில், வெற்றி பெற்றவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு பின்னர் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக