லேபிள்கள்

26.3.17

பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு

பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், பள்ளிகளில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேட்டை அறிமுகப்படுத்த, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை கையாள்வதில், தற்போது உள்ள கையெழுத்திடும் நடைமுறையை மாற்றி, புதிய தொழில்நுட்ப உத்தி அடிப்படையில், 
பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை 
அறிமுகப்படுத்தப்படும். இதற்கு, 45.57 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என, சட்டசபையில், 2016 ஆக., 23ல், 110 விதியின் கீழ், முதல்வர் அறிவித்தார். அதன்படி திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு சார்பில், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக