லேபிள்கள்

23.7.14

TNTET NEWS - விண்ணப்பிக்கும் முறையை மாற்றி TNPSC போல ONLINE முறையில் விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம்.

போட்டி தேர்வுகளுக்குவிண்ணப்பங்களை பெற்றுபூர்த்தி செய்துவிண்ணப்பிக்கும் முறையை மாற்றிடி.என்.பி.எஸ்.சி., (அரசுப்பணியாளர் தேர்வாணையம்போல்இணையதள வழியாகவிண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்துடி.ஆர்.பி., (ஆசிரியர்தேர்வு வாரியம்ஆலோசித்து வருகிறது.
அதிக வேலை பளு:

டி.ஆர்.பி., நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும்அச்சடிக்கப்பட்டவிண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கும் முறைதற்போது அமலில்உள்ளதுஇந்த முறைடி.ஆர்.பி.,க்கு அதிக வேலை பளுவைஏற்படுத்துவதாக உள்ளதுஒவ்வொரு தேர்வுக்கும்,லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர்இதனால்,லட்சக்கணக்கான விண்ணப்பங்களை அச்சடித்துமாநிலம்முழுவதும்முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டி உள்ளது.


இணையதளம்:

இந்நிலையை மாற்றிஎளிமையான முறையில்இணையதளம்வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்துதற்போது,டி.ஆர்.பி., தீவிரமாக ஆலோசித்து வருகிறதுஇணைய தளம்வழியாகவிண்ணப்பதாரர்எளிதில் விண்ணப்பிக்க முடியும்.இதனால்கட்டணமும்வெகுமாக குறையும்விண்ணப்ப கட்டணம், 500 ரூபாயாக உள்ளதுஇதுவேஇணையதள முறைக்கு மாறினால்,பதிவு கட்டணமாகமிக குறைந்த தொகையை வசூலிக்கவாய்ப்புஏற்படும்.


கால அவகாசம்:

மேலும்விண்ணப்பதாரர்களுக்குபோதிய கால அவகாசம்கொடுத்துஇணையதள பதிவில் உள்ள தவறுகளை சரி செய்யவும்,டி.ஆர்.பி., வாய்ப்பு கொடுக்கும்இதுபோன்றுபல வசதிகள்இருப்பதால்அரசு பொறியியல் கல்லூரிகளில்உதவி பேராசிரியர்பணிக்குஇணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்குமாறுவது குறித்துதற்போது ஆய்வு நடந்து வருகிறதுஅரசுபொறியியல் கல்லூரிகளில்,139 உதவி பேராசிரியரை நியமனம்செய்யஅக்டோபர், 26ம் தேதிபோட்டி தேர்வு நடக்கும் எனடி.ஆர்.பி.,அறிவித்துள்ளதுஇதற்குஆகஸ்ட், 20ம் தேதி முதல் செப்டம்பர், 5ம்தேதி வரைமாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில்,விண்ணப்பம் வழங்கப்படும் எனடி.ஆர்.பி., அறிவித்துள்ளது.


இம்மாத இறுதிக்குள்...:

இதற்கு, 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம்எனடி.ஆர்.பி., எதிர்பார்க்கிறதுஎனவேஇந்த தேர்வில் இருந்து,இணையதள பதிவு முறையைடி.ஆர்.பி., அறிவிக்கும் என,எதிர்பார்க்கப்படுகிறதுவிண்ணப்ப முறையாஇணையதள பதிவுமுறையா என்பதுஇம்மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என,டி.ஆர்.பி., வட்டாரம்நேற்று தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக