லேபிள்கள்

24.7.14

ரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள் 16 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

சென்னை :'ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்தில்மூன்று ஆண்டுகளாகஅல்லாடி வரும்,16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியரைபணி நிரந்தரம்செய்துமுறையான சம்பளம் வழங்கதமிழக அரசு முன்வரவேண்டும்என,பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத்தின் மாநில அமைப்பாளர்சேசுராஜாநேற்றுநிருபர்களிடம்கூறியதாவதுகடந்த, 2011ல், 16,549 பகுதி நேர ஆசிரியரை நியமனம்செய்யமுதல்வர் உத்தரவிட்டார்.


ஓவியம்தையல்உடற்கல்வி எனபல பிரிவுகளின் கீழ்வாரத்திற்கு,மூன்று நாள் வேலைமாதம், 5,000 ரூபாய் சம்பளம் என்றஅடிப்படையில்மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம்இந்தகாலத்தில், 5,000 ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு என்னசெய்ய முடியும்வருத்தமாக உள்ளது

இதுதமிழக அரசுக்கு தெரியாத விஷயம் கிடையாதுஆனாலும்,எங்களின் பிரச்னையைஇதுவரைகண்டு கொள்ளாமல் இருப்பது,வருத்தமாக உள்ளதுஇந்த குறைந்த சம்பளத்திற்குஏராளமானஆசிரியர், 100 கி.மீ., முதல் 150 கி.மீ., துாரம் வரை பயணிக்கின்றனர்.வாங்கும் சம்பளத்தில்பாதி தொகைபஸ் செலவிற்கேபோய்விடுகிறதுமீதியுள்ள சம்பளத்தை வைத்துகுடும்பத்தை ஓட்டமுடியாமல்அல்லாடி வருகிறோம்தொகுப்பூதிய அடிப்படையில்பணியாற்றி வந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்குசிறப்பு தேர்வுநடத்திபணிவரன் முறை செய்துதமிழக அரசுஏற்கனவேநடவடிக்கை எடுத்துள்ளதுஅதுபோல்எங்களுக்கும்சிறப்பு தேர்வைநடத்திமுறையான சம்பளத்தில்பணி நியமனம் செய்ய வேண்டும்.மற்ற ஆசிரியர்களுக்குபணியிட மாறுதல் பெறகலந்தாய்வுநடத்தப்படுகிறதுநாங்கள்பணியிட மாறுதலுக்கு வாய்ப்பேஇல்லாமல்மூன்று ஆண்டுகளாகஒரே இடத்தில் பணிபுரிந்துவருகிறோம்பலரும்கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.எங்களது பிரச்னையை தீர்க்கமுதல்வர்முன் வர வேண்டும்.இவ்வாறுசேசுராஜா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக