லேபிள்கள்

26.7.14

இணையதளத்தில் பிளஸ் 2 விடைத்தாள் நகல்.

பிளஸ் 2 உடனடி தேர்வுக்குப்பின், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, இணையதளத்தில்,இன்று விடைத்தாள் நகல் வெளியிடப்படுகிறது.

தேர்வுத்துறை அறிவிப்பு: இன்று காலை, 10:00 மணிக்கு, www.student.hse14rtru.in என்றஇணையதளத்தில், விடைத்தாள் நகல் வெளியிடப்படுகிறது. மாணவர்கள், பதிவுஎண் மற்றும் விண்ணப்ப எண்ணை பதிவு செய்து, விடைத்தாள் நகலை பதிவிறக்கம்செய்யலாம்.

மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள், இதே இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, வரும், 30ம் தேதி முதல், ஆகஸ்ட், 4ம் தேதி பகல் 1:00 மணிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். இதற்குரிய கட்டணத்தையும், முதன்மை கல்வி அலுவலகங்களில் செலுத்த வேண்டும்.இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துஉள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக