சென்னை, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 70 பேரை, பதிவு மூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியராக பணி
நியமனம் செய்ய,தமிழக அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்கத்தின் தலைவர் அன்பரசு,நிருபர்களிடம் கூறியதாவது: முந்தைய தி.மு.க., ஆட்சியில், பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர் நியமனம்
செய்யப்பட்டனர்.
2010,ஆக., 23ம் தேதிக்கு முன், பட்டதாரி ஆசிரியர்
பணிக்காக, சான்றிதழ் சரிபார்ப்பு
செய்யப்பட்டது. இதில், தகுதி வாய்ந்த, 70 பேர் விடுபட்டுவிட்டனர்.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை காரணம் காட்டி, '70 பேருக்கும் பணி வழங்க
முடியாது' என, தமிழக அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக, சென்னை உயர்
நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், ஜூலை, 9ம் தேதி தீர்ப்பு வந்தது. டி.இ.டி.,தேர்வு முறை, மேற்கண்ட தேதிக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு
செய்தவர்களுக்கு பொருந்தாது எனவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்
எனவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை, காலம் தாழ்த்தாமல்
அமல்படுத்த, தமிழக அரசு முன்வர
வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக