லேபிள்கள்

23.5.13

TET - 2013 EXAM ANNOUNCED.


Paper I - 17.08.2013 Time 10 am to 1 pm

Paper II - 18.08.2013 Time 10 am to 1 pm


Application Sales Starts From 17.06.2013 to 01.07.2013

Application Cost: Rs. 50
Examination Fees: Rs. 500  
SC/ST/Disabled Fees: Rs. 250




        தகுதித்தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150 ஆகும். தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் அதாவது 150–க்கு 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஏற்கனவே இரண்டு தடவை நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால் அதிலும் குறிப்பாக ஆதி திராவிட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சற்று மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்ச்சி மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
         தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 17–ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்யப்பட உள்ளன. விண்ணப்பத்தின் விலை ரூ.50. தேர்வுக்கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250 மட்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ. ஆபீஸ்) அலுவலகத்தில் ஜூலை மாதம் 1–ந் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
          இந்த ஆண்டு ஏறத்தாழ 7 லட்சம் பேர் தகுதித்தேர்வு எழுதுவார்கள் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது. எனவே, சுமார் 14 லட்சம் விண்ணப்ப படிவங்களை அச்சிட முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதனால், ஒருசில மாவட்டங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி நெரிசல் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், இந்த அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
          கடந்த ஆண்டுக்கான காலி பணி இடங்கள், இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங்கள் என மொத்தம் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்கள் தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதில் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் 13 ஆயிரம், இடைநிலை ஆசிரியர் இடங்கள் 2 ஆயிரம். பணிநியமன முறையில் இந்த ஆண்டு புதிய முறை அமல்படுத்தப்படுகிறது. முதலில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதன்பிறகு தகுதியான நபர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து, காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.
             தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் தகுதித்தேர்வு மதிப்பெண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களைப் பொருத்தமட்டில், தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்–2, டிகிரி, பி.எட். மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயார்செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு செய்யப்படுவார்கள். இடைநிலை ஆசிரியர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு உட்பட்டு, மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக