லேபிள்கள்

19.5.13


கலந்தாய்வுக்கு முன்னதாக புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படுமா?
கடந்த வாரம் நடந்த சட்டசபை கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தமிழகமெங்கும் உள்ள 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அதேபோல், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
  தற்போது இன்று முதல் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ள சூழ்நிலையில் புதிதாக தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு அப்பள்ளிகளின் காலி இடங்களும் கலந்தாய்வில் பட்டியலிடப்பட்டால் மூத்த ஆசிரியர்கள் தங்கள் வசதிக்கேற்ப தேவையான பள்ளிகளை தேர்ந்தெடுக்க ஏதுவாக அமையும் என கலந்தாய்வில் கலந்து கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் கருதுகின்றனர். எனவே ஆசிரியர்களின் கோரிக்கையை பள்ளி கல்வி துறை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என ஆசிரியர் சமூகம் விரும்புகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக