பி.இ., விண்ணப்பம் வழங்கும் தேதியை, வரும் 27ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, அண்ணா பல்கலை அறிவித்து உள்ளது.
கடந்த, 3ம் தேதி முதல், பி.இ., விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதுவரை, இரண்டு லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆகியுள்ளன. அண்ணா பல்கலை, ஏற்கனவே அறிவித்தபடி,
விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், இன்று கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில், விண்ணப்பம் வழங்கும் தேதியை, வரும் 27 வரை நீட்டிப்பு செய்து, அண்ணா பல்கலை நேற்று அறிவித்தது. பி.இ., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் வெளியிட்ட அறிவிப்பில், '27ம் தேதி, மாலை 5:30 மணி வரை, விண்ணப்பம் வினியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அன்று மாலை, 6:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவித்து உள்ளார். இந்த அறிவிப்பால், மேலும், 15 - 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை, விற்பனை ஆகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக