நாமக்கல் மாவட்டத்தில் நேற்று தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில், பள்ளியின் பெயர் மாறியதால் தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். . அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மூலம் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வரும் 21ம் தேதி வழங்கப்படுகிறது. இதன்படி மதிப்பெண் சான்றிதழ் பிரின்ட் செய்யப்பட்டு, நேற்று அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சென்னையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பள்ளிகளை சேர்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மதிப்பெண் சான்றிதழை மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார்.மதிப்பெண் சான்றிதழில் ஏதாவது பிழை இருந்தால், அந்த சான்றிதழ் குறித்த விபரங்களையும், மதிப்பெண் சான்றிதழையும் கொடுக்கும்படி மாவட்ட கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார். அதை தொடர்ந்து தலைமை ஆசிரியர்களுடன் வந்த ஆசிரியர்கள், தங்களது பள்ளியின் மதிப்பெண் சான்றிதழை சரிபார்த்தனர். அப்போது, மாணவரின் பெயர், போட்டோ, பள்ளியின் பெயர், மதிப்பெண் விபரம் போன்றவை சரியாக இடம் பெற்றுள்ளதா என சரி பார்க்கப்பட்டது.
அப்போது, ராசிபுரம் தாலுகாவில் உள்ள ஒரு அரசு பள்ளியின் பெயரும், திருச்செங்கோடு தாலுகாவில் உள்ள ஒரு தனியார் பள்ளி யின் பெயரும், மதிப்பெண் சான்றிதழில் தவறாக பிரின்ட் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட் டது. ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியலிலும், பள்ளியின் பெயர் தவறாக இருந்தால் அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் ஒரு சில பள்ளிகளில், மாணவர்களின் செய்முறை தேர்வு மதிப்பெண் இடம் பெறாமல் இருந்தது. இதுபற்றி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் முறையிட்டனர். தவறாக உள்ள மதிப்பெண் சான்றிதழ் குறித்த விபரங்களை எழுதி கொடுத்தால், சென்னைக்கு அனுப்பி விரைவாக புதிய மதிப்பெண் சான்றிதழ் பெற்று தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக