''புதிய பென்ஷன் திட்டத்தில், ரயில்வே ஊழியர்களுக்கு மத்தியில் அமையவுள்ள அரசு விலக்கு அளிக்க வேண்டும்,' என, தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் தலைவர் ராஜாஸ்ரீதர் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:புதிய பென்ஷன் திட்டத்தை ஏற்கனவே பா.ஜ., கூட்டணி அரசு தான் அறிமுகப்படுத்தியது. பின் வந்த காங்., அரசு, அதை நிறைவேற்ற முயன்றது. ராணுவத்தை போல, ரயில்வே
ஊழியர்களுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்று, முந்தைய காங்., அரசு நிதி அமைச்சக ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் நடந்து பா.ஜ., அரசு பதவியேற்க இருக்கிறது. மக்களுடன் நேரடி தொடர்பிலுள்ள ரயில்வே தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.ஏழாவது சம்பள கமிஷனில் அடிப்படை சம்பளம் உயர்வு போன்ற அம்சங்களை சேர்க்க வலியுறுத்தப்படும்.ரயில்வேயில் குரூப் 'டி'யில் நான்காயிரம், 600 ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களை நிரப்ப ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஊழியர் பற்றாக்குறையை ஓரளவிற்கு தற்சமயம் சமாளிக்க வாய்ப்புள்ளது, என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக