லேபிள்கள்

27.6.13

அரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஜூலை 10ஆம் தேதி நடக்கிறது


           அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 10ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

           இது குறித்து கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் சோ.செல்வம் வெளியிட்டுள்ல செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

              மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வானது எதிர்வரும் 10.07.2013 அன்று நடத்தப்பட உள்ளது.

           கலந்தாய்வு அரசாணை எண்.29 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள் 18.06.2013இல் உள்ள நெறிமுறைகளின்படி நடைபெறும் எனவும், பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பங்களை 05.07.2013ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அலுவலகத்தில் உரிய வழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இணை இயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக