லேபிள்கள்

8.11.14

மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு : தனித்தேர்வர்கள் ஆன்லைனில் 10ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குவிண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆண்டுதோறும் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள், 2015 மார்ச் மாதம் நடக்க இருக்கும் பொதுத் தேர்வில் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் (‘எச் வகை). பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு இடைவெளி, 1.3.2015ல் பதினாறு ஆண்டுகள் 6 மாதம் பூர்த்தி அடைந்தவர்களும் நேரடி தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம் (எச்பி வகை). 

ஆண் தனித் தேர்வர்களும், பெண் தனித் தேர்வர்களும் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய கல்வி மாவட்ட வாரியாக தனித்தனியே சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்கள் இந்த சேவை மையங்களுக்கு சென்று தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம்பதிவு செய்து கொள்ள வேண்டும். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்களை ஷ்ஷ்ஷ்.tரூ.பீரீமீ.வீரூ. என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தங்கள் விண்ணப்பங்களை வரும் 10ம் தேதி முதல் 21ம் தேதி வரை பதிவு செய்யலாம். ‘எச்‘ வகை தனித்தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 வீதம் தேர்வுக் கட்டணமும் அதனுடன் இதர கட்டணமாக ரூ.35ம் செலுத்த வேண்டும். ‘எச்பி‘ வகை நேரடித் தனித்தேர்வர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.150, இதர கட்டணம் உள்பட மொத்தம் ரூ.187 செலுத்த வேண்டும். மேற்கண்ட இரண்டு வகை தேர்வர்களும் ஆன்லைன் கட்டணமாக ரூ. 50 செலுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக