லேபிள்கள்

3.11.14

இன்று (3.11.14) திருப்பூர் மாவட்ட TNGTF பொறுப்பாளர் மற்றும் வெள்ளகோவில் ஒன்றிய TNGTF பொறுப்பாளர்கள் திருப்பூர் DEEO உடன் சந்திப்பு.

      இன்று (3.11.14) திருப்பூர் மாவட்ட TNGTF பொறுப்பாளர் திரு.விநாயகமூர்த்தி தலைமையில் வெள்ளகோவில் ஒன்றிய TNGTF பொறுப்பாளர்கள் திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை சந்தித்தனர்.

       சந்திப்பின் போது மாவட்டத்தில் 23.08.2010 க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடித்து 23.08.2010 க்கு பின் பணிநியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிப்பயன் மற்றும் பணப்பலன் வழங்க பரிந்துரை வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.

       மேலும் மாவட்டத்தில் பல ஆசிரியர்களுக்கு CPS ACCOUNT வழங்கப்படவில்லை எனவும் அதனை விரைந்து வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.

          உரிய  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த DEEO அவர்களுக்கு நன்றி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக