லேபிள்கள்

28.7.14

பி.எட்., படிப்பிற்க்கு விண்ணப்பிக்க‌ 31ந் தேதிவரை காலஅவகாசம்: துணைவேந்தர் விஸ்வநாதன் அறிவிப்பு.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்முதல்முறையாக இந்த வருடம் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும்அரசு உதவி பெறும்
பி.எட்., கல்லூரிகளில் உள்ள பி.எட் இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக கலந்தாய்வை நடத்த உள்ளது.

இந்த கல்லூரிகளில் 300 இருக்கின்றன. இந்த இடங்களில் சேரஆன்லைன் மூலம் பட்டதாரிகள் வருகிறார்கள். இன்றுடன்(திங்கட்கிழமை) விண்ணப்பிக்கும் தேதி முடிவடைவதாக இருந்தது.இந்த நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்புதேர்வு முடிவு சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது.எனவே பி.எட்படிப்பிற்க்கு விண்ணப்பிக்க‌ 31ந் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


இது பற்றி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகதுணைவேந்தர் பேராசிரியர் விஸ்வநாதன் கூறுகையில் 29ந் தேதிமுதல் 31ந் தேதி வரை விண்ணப்பிப்பவர்கள் சென்னையில் உள்ளதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அசோக் நகரில்உள்ள ஸ்டெல்லா மேட்டிட்டியூடினா பி.எட்., கல்லூரி,சைதாப்பேட்டையில் உள்ள அரசு பி.எட்., கல்லூரிகளில் மட்டுமேவிண்ணப்பிக்க வேண்டும். இதுவரை 8ஆயிரம் பட்டதாரிகள்விண்ணபித்துள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக