லேபிள்கள்

28.7.14

உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு

பல அரசு பள்ளிகளில்மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்துவருகிறதுஇதனால்பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணியாற்றிவருவது அதிகரித்துள்ளதுஅவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்கள்பற்றி
கணக்கெடுக்ககல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இலவச கல்விபுதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவ,மாணவியர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது.புதுச்சேரி மாநிலம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் 462செயல்பட்டு வருகின்றனமொத்தமுள்ள 284 அரசு பள்ளிகளில்,நகரப்பகுதியில் 140 பள்ளிகளும்கிராமப்புறத்தில் 127பள்ளிகளும்இயங்கி வருகின்றன.

தற்போதுஅரசு பள்ளிகளுக்கு இணையாகதனியார் பள்ளிகளும்அதிகரித்து வருகின்றனஆங்கில மோகம்கல்வித்தரம்,போக்குவரத்து வசதி உள்ளிட்ட காரணங்களால்பெரும்பாலானமக்கள் தனியார் கல்வி நிறுவனங்களையே நாடி வருகின்றனர்.

சேர்க்கையில் சரிவுஆண்டுதோறும் கிராமப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கணிசமாக குறைந்து வருகிறது.அதேசமயம்தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைஆண்டுதோறும் அதிகரித்து வருகிறதுஇந்நிலையில்அரசுப்பள்ளிகளைப் பொறுத்தவரைநகரப் பகுதியில் உள்ள பள்ளிகளில்பணியாற்றவே பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புகின்றனர்.மாணவர்களின் கிரகிப்பு திறன்நீண்ட துார பயணம்போக்குவரத்துவசதியின்மை போன்ற காரணங்களால் கிராமப்புற பள்ளிகளில்பணியாற்றுவதை தவிர்க்க விரும்புகின்றனர்.

பற்றாக்குறைசில ஆசிரியர்கள் ஆளுங்கட்சி பிரமுகர்களின்சிபாரிசின் பேரில்நகர்புற பள்ளிகளிலேயே பல ஆண்டு காலம்பணியாற்றும் நிலை உள்ளதுஇது ஒரு புறமிருக்கசீனியர்ஆசிரியர்கள் பலர்கல்வித் துறை அதிகாரிகளின் கைங்கரியத்தால்நகர் பகுதியிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

போராட்டம்இதன்காரணமாக கிருமாம்பாக்கம்நெட்டப்பாக்கம்,தவளக்குப்பம்மதகடிப்பட்டு உட்பட பல இடங்களில் உள்ளகிராமப்புற அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பக்கோரிமாணவர்கள்வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதும்ஆங்காங்கே நடந்து வருகிறது.

சுற்றறிக்கைஎனவேபள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை,பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு மாற்றகல்வித்துறை முடிவுசெய்துள்ளதுஇதுகுறித்துகடந்த வாரம் அனைத்து பள்ளிகளுக்கும்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கணக்கெடுப்புஒவ்வொரு பள்ளியிலும் உபரி ஆசிரியர்கள் எத்தனைபேர் உள்ளனர் என கணக்கெடுத்துஅறிக்கை தருமாறுதலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதுஅதன்அடிப்படையில்காலி பணியிடங்களுக்கு உபரி ஆசிரியர்களைஇடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

வசதிகள் இருந்தும்...

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடபுத்தகம்சீருடை,காலணிசிற்றுண்டிசைக்கிள்பாக்கெட் மணி உள்ளிட்ட பலஇலவசங்களை அரசு வாரி வழங்கி வருகிறதுஅத்துடன்,தேவையான கட்டட வசதிவிளையாட்டு மைதானம் போன்றவசதிகளையும் செய்து கொடுத்து வருகிறதுஎனினும்ஆரம்பக்கல்வியைத் பொறுத்தவரைஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை,படிப்படியாக குறைந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக