லேபிள்கள்

30.7.14

இன்னும் 6 நாளில் முடிகிறது பி.இ., கலந்தாய்வு : இதுவரை 81 ஆயிரம் இடங்கள் நிரம்பின

பி.இ., கலந்தாய்வில், இதுவரை, 81 ஆயிரம் இடங்கள் நிரம்பின. இன்னும், 1.22 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. கடந்த, 7ம் தேதி முதல் நடந்து வரும் பொதுப்பிரிவு கலந்தாய்வு, நேற்று முன்தினம் வரை, 22 நாட்கள் நடந்துள்ளன. ரம்ஜான் பண்டிகை காரணமாக, நேற்று விடுமுறை.
மீண்டும் இன்று முதல், வரும் ஆக., 4ம் தேதி வரை, 6 நாட்களுக்கு, கலந்தாய்வு நடக்கும். இதுவரை நடந்த கலந்தாய்வில், 81,083 இடங்கள் நிரம்பின. 1,22,996 இடங்கள் காலியாக உள்ளன. இன்று முதல், 6 நாட்கள் நடக்கும் கலந்தாய்வு முடிவில், மொத்த மாணவர் சேர்க்கை, 1 லட்சத்தை தொடலாம் எனவும், இதனால், இறுதியில், 1 லட்சம் இடங்கள் காலி ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, 37,619 பேர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். 326 பேர், கலந்தாய்வுக்கு வந்து, 'சீட்' எடுக்கவில்லை. நிரம்பிய பாட பிரிவுகளில், மெக்கானிக்கல் பிரிவு, முதலிடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில், 19,418 பேர்; இ.சி.இ., (எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்) பிரிவில், 15,683 பேர்; சிவில் பிரிவில், 12,262 பேர் சேர்ந்துள்ளனர். இதற்கு அடுத்து, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில், 10,680 பேர்; இ.இ.இ., (எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்) பிரிவில், 9,216 பேரும்
சேர்ந்துள்ளனர்.

வகுப்பு வாரியான மாணவர் சேர்க்கை
மற்றும் காலி இடங்கள் விவரம்
வகுப்பு  நிரம்பிய இடங்கள் காலி இடங்கள்
ஓ.சி.,          38,542                              24,683
பி.சி.எம்.,     2,180                                4,964
பி.சி.,          19,373                              34,696
எம்.பி.சி.,  13,403                              27,442
எஸ்.சி.ஏ.,        781                                5,351
எஸ்.சி.,     6,635                              23,990
எஸ்.டி.,         169                                 1,870
மொத்தம்     81,083                            1,22,996

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக