லேபிள்கள்

2.8.14

விண்ணப்பங்கள் அனுப்பும்போது, சான்றிதழ்நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது

விண்ணப்பங்கள் அனுப்பும்போது, சான்றிதழ்நகல்களில் அரசுஅதிகாரிகளின் சான்றளிப்பு பெறும் முறை ரத்தாகிறது.இதற்கானநடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார்.
சீர்திருத்த நடவடிக்கை நரேந்திர மோடி, கடந்த மே மாதம் 26ந் தேதி பிரதமர் பதவிஏற்றதுமுதல், மக்கள் பலன் அடைகிற விதத்தில்அரசுநடைமுறைகளை எளிமைப்படுத்துவதில்ஆர்வம் காட்டி வருகிறார்.கடந்த ஜூன் மாதம் 4ந் தேதி தன்னை சந்தித்தபல்வேறு துறைசெயலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனைநடத்தினார். அப்போதும் அவர், பொதுமக்கள் பலன் அடையத்தக்கவிதத்தில்அரசு நடைமுறை காரியங்களில் சீர்திருத்தங்கள் செய்வதுதொடர்பாக விவாதித்தார்.

சான்றளிப்பு முறை

அந்த வகையில், தற்போது மாணவர்கள், பொதுமக்கள் மத்திய,மாநில அரசுகளில், அரசு நிறுவனங்களில்வேலை பெறவும், கல்விநிறுவனங்களில் படிப்பதற்கும், வேலை வாய்ப்பு தேர்வுகள்எழுதுவதற்கும்விண்ணப்பிக்கிறபோது, அத்துடன் கல்விச்சான்றிதழ்,சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடசான்றிதழ்போன்றவற்றின் ஜெராக்ஸ் நகல்களை 'கெஜட்டட்ஆபிசர்ஸ்' என்று அழைக்கப்படுகிற அரசிதழ் பதிவுபெற்றஅதிகாரிகளின் சான்றளிப்பு பெற்று இணைக்கிற நடைமுறைஉள்ளது. இப்படி சான்றளிப்பு பெறுவதற்கு அரசு அதிகாரிகளை தேடிஅலைவதில் பொதுமக்களுக்கு நேரமும்,பயணச்செலவும்விரையமாகிறது. அதிகாரிகளுக்கு நேரம் விரையமாகிறது.இந்தசான்றளிப்பு முறையை முடிவுக்கு கொண்டு வந்து,நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி விரும்பி அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளார். சுயசான்றளிப்பு அந்த வகையில் இனி அரசிதழ் பதிவு பெற்றஅதிகாரிகளின் சான்றளிக்கப்பட்ட நகல்களைப்பெற்றுபயன்படுத்துவதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களே தங்களதுசான்றிதழ் நகல்களை சுயசான்றளிப்பு செய்யும் நடைமுறைவருகிறது. நேர்முகத்தேர்வு போன்ற கடைசி கட்டநடவடிக்கையின்போது,அசல் சான்றிதழை கொண்டு வரச்செய்துஉறுதி செய்துகொள்ளப்படும். இந்த நடைமுறையை கொண்டு வரபிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.


இதற்கான வழிவகைகளை செய்யுமாறு மத்திய அரசின் அனைத்துதுறைகள், அமைச்சகங்கள், மாநில அரசுகளுக்கு, யூனியன்பிரதேசங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல்களைபிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். தவறுசெய்தால் நடவடிக்கை இந்த சுய சான்றளிப்பு முறையினைப்பயன்படுத்தி யாரேனும் தவறாகவோ, பொய்யாகவோசுயசான்றளிப்பு செய்தால், அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம்பாயும் எனவும் அவர் எச்சரித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக