சட்டசபையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், வீரமணி அறிவித்தபுதிய அறிவிப்புகளில், 6 திட்டங்கள், மத்திய அரசின் நிதியைபயன்படுத்தி,
அமல்படுத்தப்பட உள்ளது.
கடந்த 17ல், பள்ளிக்கல்வித் துறை மானிய கோரிக்கை மீதானவிவாதம் நடந்தது. அப்போது, துறை அமைச்சர், வீரமணி, சிலஅறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,8ம் வகுப்பு வரை படித்து,படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு,
சிறப்பு பயிற்சி அளிப்பது; 100அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, விளையாட்டு சாதனங்கள் வழங்குவது உட்பட பல திட்டங்களை, அமைச்சர் வெளியிட்டார். மேலும்,கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள மாணவர்களுக்கு, 1.63 கோடி ரூபாய் செலவில், சிறப்பு பயிற்சி அளித்தல் உட்பட, 6வகையான திட்டங்கள், மத்திய அரசின் நிதியை பயன்படுத்திஅமல்படுத்தப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக