லேபிள்கள்

30.7.14

ஆசிரியர் செயலைக் கண்டித்து குழந்தைகளை அனுப்ப மறுத்த பெற்றோர்

திருச்சுழி அருகே ஆங்கில ஆசிரியர் செயலை கண்டித்து, மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுத்தனர். திருச்சுழி அருகே ரெங்கையின்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடு நிலை பள்ளி உள்ளது. 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.தலைமை ஆசிரியை உட்பட 6 ஆசிரியர்கள் உள்ளனர். ஆங்கில ஆசிரியர் நீராத்துலிங்கம் ஒழுங்காக பள்ளிக்கு வராததால், ஆங்கில பாடத்தில் மாணவர்கள் பின்தங்கியுள்ளதாக, பெற்றோர்கள், தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமியிடம் புகார் செய்தனர்.


தலைமை ஆசிரியை , ஆங்கில ஆசிரியரை கண்டித்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த ஊர் மக்கள் விலக்கி விட்டனர். அப்போது ஆங்கில ஆசிரியர் ஊர் மக்களை திட்டினார். இதை தொடர்ந்து, ஊர் மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த டி.இ.ஒ., டென்னிஸ், ஏ.இ.ஓ., இந்திராணி, "ஆங்கில ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்படுவார்" என கூறியதையடுத்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக